News May 5, 2024
தமிழர்களின் வலியை சொல்லும் ‘ஃப்ரீடம்’

விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘கழுகு’. அதன் இயக்குநர் சத்யசிவா, ‘ஃப்ரீடம்’ என்ற படத்தை சத்தமில்லாமல் இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தில் சசிக்குமார், லிஜோ மோல் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இலங்கை சிறப்பு முகாம்களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், தமிழர்களின் வலியை எடுத்துச்சொல்லும் வகையில், இப்படத்தை அவர், இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News December 7, 2025
உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

USA குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டதாக ஜெலென்ஸ்கி கூறிய சில மணிநேரங்களில், உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தியுள்ளது. 653 ஆளில்லா விமானங்கள், 51 ஏவுகணைகள் மூலம் 700-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் மின்நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அணுமின் நிலையத்தின் மின்சாரம் துண்டிப்பு, உலை பாதுகாப்பிற்கான கவலையை எழுப்பியுள்ளது.
News December 7, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. வந்தது HAPPY NEWS

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான அறிவிப்பை இம்மாத இறுதியில் அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. வேட்டி, சேலை மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு ஆகியவற்றை டோக்கன் அடிப்படையில் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பரிசுத் தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வரை வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
News December 7, 2025
போருக்கு தயாராகிறதா வெனிசுலா?

அமெரிக்கா-வெனிசுலா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், வெனிசுலா புதிதாக 5,600 வீரர்களை ராணுவத்தில் சேர்த்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என வெனிசுலா கப்பல்களை, USA தாக்கி வருகிறது. இதில், இதுவரை 87 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கைப்பற்ற நடக்கும் USA-வின் சதி இது என்று குற்றஞ்சாட்டியுள்ள அதிபர் மதுரோ, ராணுவத்தை பலப்படுத்தி வருகிறார்.


