News January 13, 2026
வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருமா தேமுதிக?

2005-ல் கட்சியை தொடங்கிய விஜயகாந்த், 2006 தேர்தலில் DMK, ADMK-வை எதிர்த்து கொண்டே, களத்தில் பாமக, விசிகவையும் ஒரு கை பார்த்தார். அந்த தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்ததுடன் விஜயகாந்தும் வெற்றி பெற்றார். 2011-ல் எதிர்கட்சியாக இருந்த தேமுதிக, அதன்பின் சரிவை சந்தித்தது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு MLA கூட இல்லை. இதை மனதில் வைத்துதான் கூட்டணி அறிவிப்பை பிரேமலதா, தள்ளி வைத்திருக்கிறாராம்.
Similar News
News February 6, 2026
விடுமுறை.. இன்று முதல் 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

வார விடுமுறையையொட்டி, மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல போக்குவரத்துத் துறை சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இன்று முதல் 3 நாள்களுக்கு சுமார் 750 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. நீங்களும் உடனடியாக <
News February 6, 2026
டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா?

தொலைந்த டிரைவிங் லைசென்ஸை RTO அலுவலகம் செல்லாமலேயே ஆன்லைனில் பெறலாம் *<
News February 6, 2026
தேமுதிகவின் கூட்டணி முடிவு.. பிரேமலதா புதிய அறிவிப்பு

தேமுதிக எந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்பதை பிப்.17-ம் தேதிக்குள் அறிவிப்பேன் என பிரேமலதா உறுதியாக அறிவித்துள்ளார். கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்பமனு விநியோகத்தை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அவர், பல தரப்பினர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார். கடந்த 3-ம் தேதி கூட்டணி முடிவை அறிவிப்பதாக கூறிய பிரேமலதா அன்றைய தினம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


