News May 5, 2024
ஜி.டி எக்ஸ்பிரஸ் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

சென்னை சென்ட்ரல் – புதுதில்லி இடையே கிராண்ட் ட்ரங்க் விரைவு ரயில் (எண்-12615/12616) தினமும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த பிப்ரவரி 9 முதல் மே.8 வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் மே 9 முதல் மேலும் 3 மாதங்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 27, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு மாவட்டம் (26/08/25) இன்று செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
News August 26, 2025
மாற்றுத்திறனாளி போல் வேடமிட்ட இளம் ஜோடி கைது

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் இன்று (ஆக.26 ) மாற்றுத்திறனாளிகள் போல் வேடமிட்டு சிக்னலில் பிச்சை எடுத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விசாரித்த தாம்பரம் போலீசாரிடம் இருந்து தலை தெறிக்க ஓடியவர்களை கைது செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கணவன் மனைவி என்பதும் தெரியவந்தது.
News August 26, 2025
செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க

செங்கல்பட்டில் வரும் ஆக.30ஆம் தேதி சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறும் முகாமில் 8th, பட்டப்படிப்பு மற்றும் BE, ITI, டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் <