News January 13, 2026

குமரி: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)

Similar News

News January 31, 2026

குமரி: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

குமரி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இங்கு<> கிளிக்<<>> செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் ரசீது சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க

News January 31, 2026

குமரி: நகை கடையில் நூதன முறையில் திருட்டு

image

காஞ்சிரம்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ மணிகண்டன். இவர் சாங்கை பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் என இருவர் வந்துள்ளனர். இருவரும் நகை வாங்குவது போல் நடித்து மூன்று கிராம் மோதிரம் மற்றும் கம்மலை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 31, 2026

குமரி: பெண்ணிடம் ஆபாசமாக பேசிய EB அதிகாரி சஸ்பெண்ட்

image

ஆதித்தபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தான் கட்டிய வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு மனு அளித்துள்ளார். மனு தொடர்பாக தோவாளை இளநிலை பொறியாளரை நேரிலும், போனிலும் தொடர்பு கொண்ட போது மின் பொறியாளார் பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஆட்சியரிடம் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரி இளநிலை பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!