News January 13, 2026

மல்லூர் – ராசிபுரம் சாலையில் பயங்கரம்!

image

சேலம் மாவட்டம், ஏர்வாடி அடுத்த எருமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அம்மாசி மகன் கொண்டான் (75). இவர் வெண்ணந்தூர் அருகே உள்ள மேற்கு வலசு பகுதியில் சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அப்போது மல்லூர் பகுதியில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது பலமாக மோதியதில் கொண்டான் (75) உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரணை!

Similar News

News January 26, 2026

நாமக்கல்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

நாமக்கல் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> https://voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்!ஷேர் பண்ணுங்க

News January 26, 2026

மோகனூர் அருகே சோகம்: வாலிபர் விபரீத முடிவு

image

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஐயம்பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நவீன்குமார் (27), நீண்ட நாள் உடல்நலக் குறைவால் மனவேதனையடைந்து நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் மோகனூர் போலீசார் உடலைக் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 26, 2026

நாமக்கல்: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

image

நாமக்கல் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

error: Content is protected !!