News January 13, 2026
’பராசக்தி’ பார்த்து அழுதேன்: மன்சூர் அலிகான்

’பராசக்தி’ திரைப்படம் ஹிந்தி திணிப்பை பற்றி இளைஞர்களுக்கு தெரியப்படுத்த உதவியாக இருப்பதாக மன்சூர் அலிகான் பேசியுள்ளார். இப்படத்தில் அனைத்தையும் காட்டாமல் வெறும் 10% தான் காட்டியிருக்கிறார்கள் என்ற அவர், அதற்கே சென்சார் போர்டு ஏகப்பட்ட கெடுபிடி செய்துவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும் இப்படத்தை 5 முறைக்கு மேல் பார்த்து அழுதுவிட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 3, 2026
மாதம் ₹1,500.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்

மாற்றுத்திறனாளிகள் (ஆண்கள், பெண்கள்) தங்கள் அன்றாட செலவுகளை பூர்த்தி செய்ய ஏதுவாக TN அரசு மாதம் ₹1,500 வழங்கி வருகிறது. இந்த ஓய்வூதியம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். இந்த ஓய்வூதியத்தை பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள், VAO, தாசில்தாரை சந்தித்து விண்ணப்ப படிவத்தை பெற்று, உரிய ஆவணங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், <
News February 3, 2026
கூட்டணி அறிவிப்பு; பிரேமலதா முடிவை மாற்றியது ஏன்?

பிப்.3-ல் கூட்டணி முடிவை அறிவிப்பேன் என கூறியிருந்த <<19037842>>பிரேமலதா<<>>, தனது முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டார். இதற்கு முக்கிய காரணம் சீட் விவகாரம் என சொல்லப்படுகிறது. தேமுதிகவை கூட்டணியில் இணைக்க விரும்பினாலும், திமுக(6), அதிமுக(9+1) தொகுதிகள்தான் தர முடியும் என கறாராக சொல்லிவிட்டார்களாம். இதனால், கூட்டணி அறிவிப்பை தாமதப்படுத்தியுள்ள பிரேமலதா, அதிமுகவா, தவெகவா என கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்கிறாராம்.
News February 3, 2026
தவறாக தொட்டவனை பளாரென அடித்த நடிகை ரேவதி

பள்ளிப் பருவத்தில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து நடிகை ரேவதி மனம் திறந்துள்ளார். அதில், 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, தன்னை பஸ்ஸில் ஒருவன் தவறாக தொட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த இடத்திலேயே அவனை பளாரென அடித்ததாகவும், அங்கிருந்தவர்கள் அனைவரும் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறுவயதில் அம்மா கொடுத்த தைரியத்தாலேயே இப்படி செய்ததாகவும் ரேவதி கூறியுள்ளார்.


