News January 13, 2026
அப்போ தோனி.. இப்போ கோலி!

NZ-க்கு எதிரான முதல் ODI-யின் போது, ரோஹித் அவுட்டாகி பெவிலியன் திரும்பும் போது, ரசிகர்கள் கோலியின் என்ட்ரிக்கு ஆரவாரம் செய்தனர். இந்நிலையில், ஒரு வீரர் அவுட்டாகி வெளியேறும் போது, ரசிகர்கள் தனக்கு உற்சாக வரவேற்பளிப்பது சரியல்ல என கோலி தெரிவித்துள்ளார். இதே போன்று தான் தோனிக்கும் ரசிகர்கள் ஆதரவு அளித்தனர் என குறிப்பிட்ட அவர், அவுட்டாகி வெளியேறும் வீரரின் மனநிலையை உணர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Similar News
News February 10, 2026
தாயின் ஆபாச போட்டோவை காதலனுக்கு அனுப்பிய பெண்

இதை படித்த பிறகு உங்கள் பிள்ளைகள் ஸ்மார்ட்போன் யூஸ் செய்வதை இன்னும் அதிகமாக கவனிப்பீர்கள். பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண், தனது அம்மா, பாட்டி ஆகியோரின் அந்தரங்க போட்டோஸை காதலனுக்கு அனுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தாய் அளித்த புகாரில், மகளின் போனை பறிமுதல் செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். உறவுகளை நீட்டிப்பதற்கு தொழில்நுட்பம், அழிப்பதற்கு அல்ல என்பதை உணருங்கள்.
News February 10, 2026
பாஜகவை நாக்-அவுட் செய்ய CM ஸ்டாலின் திட்டமா?

கடந்த முறை பெற்ற வெற்றிகளை கூட இம்முறை பாஜக பெற்று விடக்கூடாது என்பதில் திமுக கவனமாக இருக்கிறதாம். குறிப்பாக, நயினாரை தோற்கடிக்க அப்பகுதியில் பெரும்பான்மை கொண்ட சமூக வேட்பாளரை களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், பாஜக வெற்றி பெற்ற 4 தொகுதிகளிலும் திமுக வேட்பாளரையே நிறுத்தவும் CM ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News February 10, 2026
வியூகம் இல்லாமல் எப்படி பணியாற்றுவது?அண்ணாமலை

சட்டமன்ற தேர்தலின் வியூகம் குறித்து என்னுடன் யாரும் விவாதிக்கவில்லை என பாஜக மையக்குழு கூட்டத்தில் அண்ணாமலை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வியூகம் என்ன என்று கூறாமல் தன்னை தேர்தல் பணியாற்றுமாறு கூறினால் எப்படி பணியாற்ற முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளாராம். மேலும், எந்த வியூகத்தின் அடிப்படையில் 6 தொகுதிகளுக்கு என்னை பொறுப்பாளர்களாக நியமித்தனர் எனவும் கேட்டுள்ளாராம்.


