News January 13, 2026
‘பராசக்தி’ படத்தை தடை செய்யுங்க: காங்., முழக்கம்

SK-வின் ‘பராசக்தி’ படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக இளைஞர் காங்., வலியுறுத்தியுள்ளது. இது முழுக்க திமுக சார்பு படம்; 1965-ல் கோவைக்கு வராத இந்திரா காந்தியை அங்கு வந்ததாகவும், அவர் கண் முன்னே ரயில் எரிப்பு போராட்டம் நடந்ததாகவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் நடக்காத ஒன்றை இப்படத்தில் திணித்த படக்குழு மன்னிப்பு கேட்டு, அனைத்து காட்சிகளையும் உடனே நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது
Similar News
News February 2, 2026
பிப்ரவரி 2: வரலாற்றில் இன்று

*உலக சதுப்பு நில நாள் *1896 – சுதந்திர போராட்ட வீரர் வெ.அ.சுந்தரம் பிறந்தநாள் *2010 – நடிகர் ஹனீஃபா நினைவு நாள் *2023 – நடிகர் கே. விஸ்வநாத் நினைவு நாள்
News February 2, 2026
விமல் படத்திற்கு 3 விருதுகள்.. கொந்தளிக்கும் கோலிவுட்

TN அரசின் திரைப்பட விருதுகளில் விமலின் ‘சண்டைக்காரி’ படத்திற்கு சிறந்த திரைப்படம், ஆர்ட் டைரக்ஷன், பின்னணி பாடகர் பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன. ஆனால், இப்படி ஒரு படம் தியேட்டரில் வெளியாகவில்லை என்றும், ஓடிடி தளத்திலும் இல்லை எனவும் கோலிவுட் வட்டாரங்கள் கொந்தளிக்கின்றன. படத்தின் இயக்குநர் ஆர்.மாதேஷ் தேர்வுக்குழுவில் உள்ளதால், தனக்கு தானே விருது அறிவித்துக் கொண்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
News February 2, 2026
₹16 லட்சம் கோடிக்கு முதலீடுகள்: அஸ்வினி வைஷ்ணவ்

பட்ஜெட்டில் ரயில்வேவுக்கு ₹2.77 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இது ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்குகளை நோக்கியது என தெரிவித்துள்ளார். இதில் ₹20,000 கோடி ரயில்வேஸ் மேம்பாட்டுக்கும், பயணிகள் பாதுகாப்புக்கு செலவழிக்கப்படும் என்ற அவர், புதிதாக அறிவிக்கப்பட்ட 7 அதிவேக ரயில் தடங்களால் ₹16 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் எனக் குறிப்பிட்டார்.


