News January 13, 2026
வெந்த புண்ணுல வேல பாய்ச்சுன மொமண்ட்

விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. ஏமாந்த ரசிகர்களை கொஞ்சம் தேற்றுவோம் என்ற எண்ணத்தில், தயாரிப்பாளர் தாணு ‘தெறி’ படத்தை வரும் 15-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவித்தார். ஆனால், இந்த படமும் தற்போது தள்ளிப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. வெந்த புண்ணுல வேல பாய்ச்சுன மொமண்ட் என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
Similar News
News January 30, 2026
விபத்தில் சிக்கினார் விஜய் சேதுபதி.. எலும்பு முறிவு!

கைவிரலில் <<18997502>>எலும்பு முறிவு<<>> ஏற்பட்டுள்ளதால், நடிகர் விஜய் சேதுபதியை அடுத்த 8 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், காக்கா முட்டை மணிகண்டன் இயக்கி வரும் ‘காட்டான்’ & வெற்றிமாறன் – சிம்புவின் ‘அரசன்’ ஆகியவற்றின் ஷூட்டிங் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக, ‘காந்தி டாக்ஸ்’ செய்தியாளர்களை சந்திப்பின் போது, விஜய் சேதுபதி கையில் கட்டுடன் நின்றிருந்தார்.
News January 30, 2026
சபரிமலை தங்கம் திருட்டு: நடிகர் ஜெயராம் வாக்குமூலம்

<<18345270>>சபரிமலை தங்கம் திருட்டு<<>> வழக்கில் நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளது. துவார பாலகர் சிலைக்கான தங்க தகடுகள் சென்னையில் உள்ள ஜெயராம் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டதால் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. தங்க தகடுகளை வீட்டில் வைத்து பூஜை செய்தால் குடும்பம் செழிப்பாக இருக்கும் என கூறப்பட்டதால், அதை செய்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
News January 30, 2026
தொகுதி மாறும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரி CM ரங்கசாமி இம்முறையும் 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. 2011-ல் இந்திராநகர், கதிர்காமம் தொகுதிகளில் வென்ற அவர், 2016-ல் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதிர்க்கட்சி தலைவரானார். இதனால் சென்டிமென்டாக, 2021-ல் தட்டாஞ்சாவடி, ஏனாம் என மீண்டும் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இம்முறையும் மங்கலம், கதிர்காமம் தொகுதிகளில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளாராம்.


