News January 13, 2026
சேலம்: கல்லூரி மாணவியை கொன்று காசிக்குத் தப்பியோட்டம்?

திருநெல்வேலி வீரவநல்லூரைச் சேர்ந்த ஓமியோபதி மாணவி வர்ஷினி, கடந்த 6-ஆம் தேதி சேலத்திலுள்ள விடுதியில் படுகொலை செய்யப்பட்டார். திருமணமானவருடன் மகளுக்கு இருந்த காதலால் ஆத்திரமடைந்த தந்தை வரதராஜனே இக்கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் தலைமறைவான அவர் ரயில் மூலம் காசிக்குத் தப்பிச் சென்றது கண்டறியப்பட்டதை அடுத்து, அவரைப் பிடிக்க சேலம் தனிப்படை போலீசார் தற்போது காசிக்கு விரைந்துள்ளனர்.
Similar News
News January 17, 2026
சேலம்: ரேஷன் கார்டு வச்சுருக்கீங்களா?

சேலம் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!
News January 17, 2026
சேலம்: தெருநாய் தொல்லையா..? உடனே CALL!

சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தெருநாய் கடியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகியுள்ளது. இதனால் சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்பட்டு வருகிறது. எனவே, சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை இருந்தால் 8300062992 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். மக்களே, இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 17, 2026
சேலம் மத்திய சிறையில் ஆணியை விழுங்கிய கைதி!

மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த கைதி சூரிய பிரகாஷ், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், வயிற்றில் கடுமையான வலி ஏற்படுவதாகக் கூறினார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இரண்டு ஆணி மற்றும் ஒரு சட்டை பட்டனை விழுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், சிறை அதிகாரிகள் இதுகுறித்துத் விசாரணை நடத்தி வருகின்றனர்.


