News May 5, 2024

பாண்டி “ராக் பீச்” பகலில் வெறிச்சோடி

image

அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. புதுவையில் முதல் நாளிலேயே 100.4 டிகிரி வெயில் பதிவானது. வார இறுதி விடுமுறையை புதுவையில் கொண்டாட வந்த சுற்றுலா பயணிகளும் தங்கும் விடுதிகளில் முடங்கி இருந்தனர். மாலை 5 மணிக்கு பின்னரே அவர்கள் வெளியில் வரத் தொடங்கினார்கள். இதன் காரணமாக புதுவை கடற்கரை, பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள், மக்கள் கூட்டம் அலைமோதியது.

Similar News

News December 8, 2025

காரைக்கால்: கிளினிக்கில் பணத்தை திருடியவர் கைது

image

காரைக்கால் ரயில் நிலையம் அருகே, டாக்டர் வனிதா என்பவர் தனியார் கிளினிக் நடத்தி வருகிறார். இவர், தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், கிளினிக் கதவை உடைக்கப்பட்டு, ரூ.3 லட்சம் பணம் மற்றும் மொபைல் போன் திருடப்பட்டிருந்தது. புகார் படி போலீசார் அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ், என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News December 8, 2025

புதுவை: கார் மீது லாரி மோதி விபத்து

image

திண்டிவனத்தில் இருந்து, கடலூர் நோக்கி கார் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. புதுவை இந்திராகாந்தி சிக்னல் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதியது. அதே நேரத்தில் பின்னால் வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

News December 8, 2025

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய முதலவர்

image

தேக்வாண்டோ மாணவர்களுக்கு, முதல்வர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கினார். புதுச்சேரியில் தேக்வாண்டோ தற்காப்பு கலை பயிலும் மாணவர்கள், சட்டசபை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்தனர். இந்த கலையில், மாநில அளவில் பிளாக் பெல்ட் எனும் நிலையை அடைந்த, நுாறு மாணவர்களுக்கு சான்றிதழை, முதல்வர் வழங்கினார்.

error: Content is protected !!