News January 13, 2026

புதுச்சேரி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

image

தென்கிழக்கு வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காரணமாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜன.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 18, 2026

புதுச்சேரி: சிலிண்டருக்கு கூடுதல் பணமா?

image

புதுச்சேரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>> புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

புதுவை: பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல்!

image

புதுவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, ரவி அண்ணாமலை என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் ரவி அண்ணாமலையை அழைத்து, எச்சரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரவி அண்ணாமலை, அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி மிரட்டல் விடுத்துள்ளார். தற்போது இது குறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 18, 2026

புதுச்சேரியில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை

image

புதுச்சேரி பாகூர் கொம்யூன், பனித்திட்டு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மீனவர் தர்மசீலன். இவரது மகன் பிரித்விராஜ் ஐ.டி.ஐ படிப்பை முடித்துவிட்டு கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பிரித்விராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!