News January 13, 2026

ராகு காலம் தெரியும்.. இஷ்டி காலம் தெரியுமா?

image

அமாவாசை அல்லது பௌர்ணமி திதியின் இறுதி பகுதி & அதனைத் தொடர்ந்து வரும் பிரதமை திதியின் ஆரம்பப் பகுதிகள் இணைந்ததே இஷ்டி காலம். ‘இஷ்டி’ என்பதற்கு யாகம், பூஜை அல்லது அர்ப்பணம் என பொருள். இக்காலத்தில் இஷ்ட தெய்வ வழிபாடு செய்தால், இஷ்ட தெய்வத்தின் அருளும், வரங்களும் கிடைக்குமாம். வீட்டு பூஜைகள், ஹோமம், யாகம், தானம், தர்மம், குல தெய்வ வழிபாடு, உலக நன்மைக்கான பிரார்த்தனை செய்வது மிகவும் உகந்ததாம்.

Similar News

News February 6, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 603
▶குறள்:
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
▶பொருள்: அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.

News February 6, 2026

திமுக ஆட்சியில் மாணவர்கள் ரவுடிகளாக மாற்றம்: நயினார்

image

மதுரையில் மாணவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதுடன், பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது நெஞ்சை உலுக்குவதாக நயினார் கூறியுள்ளார். தனது X பதிவில், CM ஸ்டாலினின் ஆட்சியில் மாணவர்கள் ரவுகளாக உருமாறுவதாகவும், இது சமூகத்திற்கே பேராபத்தானது எனவும் நயினார் விமர்சித்துள்ளார். நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது எனவும் அவர் கூறியுள்ளார்.

News February 6, 2026

வாயில் நெருப்பு புகைந்தால், வீட்டில் அடுப்பு புகையாது: TR

image

புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீங்கு குறித்து தனக்கே உரிய ஸ்டைலில் டி.ராஜேந்தர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். உயிருள்ள வரை உஷா ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர் நான் டிரம்ஸ் அடிப்பேன் ஆனால் தம்மடிக்க மாட்டேன்; என் வாயில் நெருப்பு புகைந்தால், என் வீட்டில் அடுப்பு புகையாது எனத் தெரிவித்தார். மேலும், தம் அடிக்காத காரணத்தினால் தான் இன்றும் தம் பிடித்து பேசுவதாக அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!