News January 13, 2026
ராணிபேட்டையில் பன்றி வெடி!

ரத்தனகிரி அருகே டிசி குப்பம் சாணார்பெண்டை கிராமத்தில் பன்றி வெடி பொருட்கள் இருவர் வைத்துள்ளனர் என கிராம மக்கள் ரத்னகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரை சேர்ந்த பிரபாகரன், கார்த்தி ஆகிய இருவரை நேற்று(ஜன.12) கைது செய்தனர். அவர்களிடம் எவ்வளவு பன்றி வெடி மருந்துகள் உள்ளது, என விசாரணை நடத்துகின்றனர்.
Similar News
News February 7, 2026
ராணிப்பேட்டை: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News February 7, 2026
ராணிப்பேட்டை: பயிற்சியை ஆய்வு செய்த கண்காணிப்பாளர்

இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர உடற்பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர் குமார் (DCRB), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
News February 7, 2026
ராணிப்பேட்டை: மூதாட்டி பரிதாப பலி!

ஆற்காடு நக்கீரன் தெருவைச் சேர்ந்த தரணி பாய் (78) என்ற மூதாட்டி, வியாழக்கிழமை அண்ணா சிலை அருகே சாலையைக் கடந்தபோது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆற்காடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


