News January 13, 2026
பழனி சென்ற பெண் பக்தர் பலி!

திருப்பூர் காந்தி நகரைச் சேர்ந்த சத்யா (57) என்பவர், பழனி முருகனைத் தரிசிக்கத் திருப்பூரில் இருந்து பாதயாத்திரையாகப் புறப்பட்டார். நேற்று திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி அருகே பழனி – தாராபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 5, 2026
வத்தலகுண்டு அருகே வசமாக சிக்கிய 3 பேர்! அதிரடி

வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைபாஸ் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சுபாஷ் (40), ஜோதி (43) மற்றும் மனோஜ் குமார் (28) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 11 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News February 5, 2026
திண்டுக்கல்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News February 5, 2026
திண்டுக்கல்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE IT!


