News May 5, 2024
பாரா பீச் வாலிபால் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பீச் வாலிபால் உலக சாம்பியன் ஷீப் போட்டி சீனாவில் மே 28-ஆம் தேதி தொடங்கி ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.போட்டியில் பங்கேற்கும் வீரா்கள் தோ்வு செய்யும் பணி நாகை புதிய கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட 10-க்கும் அதிகமான மாநிலங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா்.
Similar News
News August 27, 2025
கடன் தொல்லையால் கூலி தொழிலாளி தற்கொலை

திருமருகல் ஊராட்சி கட்டலாடி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா(44). கொத்தனார் வேலை செய்து இவர் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள மூங்கில் காட்டில் இளையராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News August 26, 2025
நாகை மக்களே… 10th பாஸ் போதும்! ரயில்வேயில் வேலை

நாகை மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருச்சி, பொன்மலை டிவிசனில் 697 பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
News August 26, 2025
குப்பையில் இருந்து உரம்; ஆட்சியர் அறிவிப்பு

வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியில் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்பட்டு சான்றிதழ் பெற்ற உயர் தர உரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், இந்த உரத்தை பயன்படுத்தி, விவசாயத்தில் அதிக விளைச்சல் பெறலாம். மேலும் பேரூராட்சி ஊழியர்களின் மூலம் உராம் விற்பனை செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.