News May 5, 2024
சிக்கன் விலை உயர்ந்தது

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று உணவில் சிக்கன் இல்லாமல் இருக்காது. அதனால், சிக்கன் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படும். நாமக்கல்லில் இன்று கறிக்கோழி (உயிருடன்) 1 கிலோ விலை ₹127க்கு விற்பனையாகிறது. பறவைக்காய்ச்சல் எதிரொலியாக கடந்த வாரம் ₹119க்கு விற்பனையான நிலையில், 1 வாரத்தில் விலை ₹8 அதிகரித்துள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் பல இடங்களில் 1 கிலோ ₹250-280 வரை விற்பனையாகிறது.
Similar News
News September 1, 2025
Beauty: இதை செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போயிடும்

இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் விழ மன அழுத்தம், தூக்கமின்மை என பல காரணங்கள் இருக்கிறது. இதை சரி செய்யவே முடியாதா என நீங்கள் வருந்தவேண்டாம். ▶இதற்கு, இரவு நேரத்தில் கற்றாழை ஜெல்லை கொண்டு 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். ▶வாழைப்பழம் / பப்பாளி சாறை முகத்தில் தடவுங்கள் ▶தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவுவது சிறந்தது ▶மன அழுத்தத்தை குறைப்பதும் அவசியம். SHARE.
News September 1, 2025
₹ 3,201 கோடி முதலீடுகளை ஈர்த்த முதல்வர்

ஜெர்மனி சென்றுள்ள CM ஸ்டாலின் தமிழகத்திற்கு ₹ 3,201 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். ரயில்வே கதவுகள் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் தயாரிக்கும் நிறுவனமான KNORR – BREMSE ₹ 2,000 கோடி முதலீடு செய்கிறது. NORDEX குரூப் ₹ 1,000 கோடியும், மின் சக்தி சார்ந்த நிறுவனமான EBM – PAPST ₹ 201 கோடியும் முதலீடு செய்கின்றன. இதன் மூலம் தமிழகத்தில் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
News September 1, 2025
‘அம்மா நான் சாகப்போறேன்’.. காதல் வலியால் சோகம்

‘இனி என்னால் தாங்கி கொள்ள முடியாது. அம்மா, நான் சாகப்போறேன். எனது சாவிற்கு அவளின் குடும்பமே காரணம்’. உ.பி. மதுராவில் தற்கொலை செய்த புகைப்பட கலைஞர் உதித்தின்(25) கடைசி வரிகள் இவை. 2 ஆண்டுகளாக காதலித்த பெண்ணுடன் ஏற்பட்ட மோதலால் கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை பார்த்து தாய் மயங்கி விழுந்தது பெரும் சோகம். இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினரிடம் போலீஸ் விசாரித்து வருகிறது.