News January 13, 2026

PM மோடி நிகழ்ச்சி சென்னைக்கு மாற்றமா?

image

மதுரையில் வரும் 23-ம் தேதி NDA பொதுக்கூட்டத்தில் PM மோடி பங்கேற்கவிருப்பதாக முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்வு மதுரைக்கு பதில் சென்னைக்கு மாற்றப்பட இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இடம் தேர்வு, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் மதுரையில் நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்துவது குறித்து கட்சி தலைவர்களுடன் நயினார் ஆலோசனை செய்வதாக கூறப்படுகிறது.

Similar News

News February 8, 2026

தங்கம், வெள்ளி விலை.. ஒரு வாரத்தில் குறைந்தது

image

கடந்த வாரத்தில் தங்கம், வெள்ளி விலை ஏற்ற இறக்கங்களுடன் பூச்சாண்டி காண்பித்தது. தங்கம் விலை சவரனுக்கு ₹11,400 வரை குறைந்த அதேநேரத்தில் ₹3,840 உயர்ந்தது. அதேபோல், வெள்ளி விலையும் 1 கிலோவுக்கு ₹40,000 வரை குறைந்த நிலையில், ₹5,000 உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி, 1 சவரன் தங்கம் ₹1,15,360-க்கும், 1 கிலோ வெள்ளி ₹2.85 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

News February 8, 2026

லவ் மேரேஜ் பண்றவங்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடம்..

image

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்யும் அனைவருக்கும் என் வாழ்க்கை ஒரு பாடம். நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும் – இவை 2 மகள்களுடன் தற்கொலை செய்த பெண்ணின் கடைசி வரிகள். பல்லாயிரம் கனவுகளுடன் காதல் திருமணம் செய்த பத்மாவை, கணவரின் வேலையில்லா திண்டாட்டமும், கடன் தொல்லையும் இந்த நிலைக்கு தள்ளியுள்ளது. ஆந்திராவின் புத்தூர் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவம் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

News February 8, 2026

பாகிஸ்தானுக்கு பலத்த அடி கொடுத்த அமெரிக்கா

image

அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாக்., PM ஷெபாஸ் ஷெரீப் & ராணுவ தளபதி அசிம் முனீர் வாஷிங்டனுக்கு பலமுறை சென்று, அமெரிக்காவின் ஆதரவை பெற தீவிரமாக முயற்சி செய்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய எல்லைக்குள் சேர்க்கப்பட்டுள்ளது, பாகிஸ்தானுக்கு பலத்த ராஜதந்திர அடியாக கருதப்படுகிறது.

error: Content is protected !!