News January 13, 2026

BREAKING: பள்ளிகளுக்கு 5 நாள்கள் விடுமுறை.. அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக போகி அன்றும் (ஜன.14) அரசு விடுமுறை அரசு அறிவித்துள்ளது. தற்போது பள்ளிக்கல்விதுறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஜன.14-ம் தேதி முதல் ஜன.18-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாள்கள் அனைத்து வகை பள்ளிகளுக்கும் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 7, 2026

பிப்ரவரி 7: வரலாற்றில் இன்று

image

*1864-மறைந்த மெட்ராஸ் மாகாண நீதிபதி சிவசுவாமி பிறந்தநாள் *1902–தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் *1979–நெப்டியூனின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது புளூட்டோ *1986–அரசியல்வாதி ஏ.ஜி.சுப்புராமன் நினைவு நாள் *1992–ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் கையெழுத்து *2001–எழுத்தாளர் பகீரதன் நினைவு நாள் *2008–நடிகர் குணால் நினைவு நாள்

News February 7, 2026

பள்ளிக் காதலை நினைவூட்டும் With Love

image

திருமணத்திற்கு தயாராகும் அபிஷன், அனஸ்வரா தங்களது முதல் காதலை உரியவர்களிடம் சொல்லிவிட்டு வாழ்க்கையை தொடங்க திட்டமிடுகின்றனர். இந்த பயணத்தில் இருவரும் உணர்ந்துகொள்ளும் விஷயங்களே With Love.
பிளஸ்: அறிமுக படத்திலேயே அபிஷன் கலக்கல், கலகலப்பான 2-ம் பாதி, நாஸ்டால்ஜிக் பள்ளிக் காதல், ஷான் ரோல்டனின் பாடல்கள் பல்ப்ஸ்: ஸ்லோவான முதல் பாதி, பழகிப்போன காதல் காட்சிகள், யூகிக்கக்கூடிய கதைக்களம் Rating: 2.5/5

News February 7, 2026

பழி சுமத்திய பாகிஸ்தான்.. கொந்தளித்த இந்தியா

image

இஸ்லாமாபாத் <<19067497>>மசூதி தாக்குதலுக்கு<<>> இந்தியாவை குற்றஞ்சாட்டிய பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய அரசு, பிரச்னைக்கான காரணத்தை கண்டறிந்து தீர்வு காண்பதை விடுத்து, மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளது. மேலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!