News January 12, 2026
வரலாற்றில் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட்

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி (ஞாயிறு) தாக்கல் செய்யப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது, நாட்டின் வரலாற்றில் இதுவே முதல்முறை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மேலும், 28-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்.
Similar News
News February 4, 2026
அண்ணாமலை விலகினார்.. பாஜகவில் பரபரப்பு

தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியது உள்கட்சி பூசலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதற்கு <<19044945>>நயினார்<<>> விளக்கம் கொடுத்தாலும், பாஜக மாநில தலைவராக இருந்தபோது அதிமுகவை அண்ணாமலை தாக்கி பேசியதும் காரணமாக கூறப்படுகிறது. இதனால் முறிந்த ADMK – BJP கூட்டணி, அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்த இறக்கிய பிறகு மீண்டும் இணைந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.
News February 4, 2026
65 கேட்கும் பாஜக… 25-க்கு கறார் காட்டும் அதிமுக

அதிமுக கூட்டணியில் இல்லாத நிலையிலேயே, கடந்த லோக் சபா தேர்தலில், 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 12-ல் 2-ம் இடம் பெற்றிருந்தது. அதை சட்டப்பேரவை தொகுதி வாரியான வாக்குகளால் பார்த்தால் 59 தொகுதிகளில் 2-வது இடமும், 64-ல் மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது. இதை முன்னிறுத்தி 65 தொகுதிகளை பாஜக அதிமுகவிடம் கேட்டுள்ளதாம். ஆனால் 25 தொகுதிகளை மட்டுமே பாஜகவுக்கு தர அதிமுக தலைமை முன்வருகிறதாம்.
News February 4, 2026
அல்சர் எரிச்சல் தீர சூப்பர் வைத்தியம்

எந்த வைத்தியம் பார்த்தாலும் அல்சர், நெஞ்செரிச்சல் பிரச்னை சரியாகலையா? இதனை சரிசெய்ய எளிய வழி இருக்கிறது. 2 வெண்டைக்காயை உப்பு நீரில் கழுவி, அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் தண்ணீரில் போட்டு வையுங்கள். தினமும் காலையில் எழுந்ததும் வெறும்வயிற்றில் அந்த தண்ணீரை 100ml அளவு அதை குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்துவர அல்சர் பிரச்னைகள் நீங்கும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.


