News January 12, 2026
சென்னையில் கேஎஸ்.அழகிரி மனைவி காலமானார்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் கேஎஸ்.அழகிரியின் மனைவி வத்சலா (65). இவர் நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (ஜன.11) காலமானார். வத்சலாவின் இறுதிச் சடங்கு கடலூர் மாவட்டம், திருப்பணிநத்தம் கிராமத்தில் இன்று மாலை நடைபெற்றது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
Similar News
News January 27, 2026
சென்னையில் வாடகை வீட்டுக்கு போறீங்களா?

சென்னையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News January 27, 2026
மகளிர் மட்டும் – PINK BUS’ பட்டியல் வெளியீடு!

மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் இன்று (ஜன-27) புதிதாகத் முதல்வர் ஸ்டாலின் ‘மகளிர் மட்டும் – PINK BUS’ என்ற புதிய போருந்துகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில் இதில் இயக்கப்படும் வழித்தடங்களின் பட்டியலை MTC வெளியிட்டது. சென்னையில் ஒவ்வொரு தடத்திலும் தலா 2 பேருந்துகள் என மொத்தமாக 10 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
News January 27, 2026
சென்னை: விரல் நுனியில் வங்கி விவரங்கள்! CLICK

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க


