News May 5, 2024
தன் பாலின பிரசாரத்தை நிறுத்தவும்: இந்து முன்னணி

தன் பாலின ஆதரவு பிரசாரத்தை நிறுத்துமாறு தமிழ்நாடு காவல்துறையை இந்து முன்னணி அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சென்னை காவல்துறையின் சமூக வலைதள பக்கத்தில் தன் பாலின ஆதரவுப் பதிவு இடம்பெற்றதாக அவர்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “தமிழின பண்பாட்டை சீரழிக்கும் இத்தகைய பிரசாரத்தை கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
Similar News
News September 1, 2025
திமுக கூட்டணியில் தேமுதிக ?

2026 தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணையவுள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்ய சபா சீட் தராததால் ஏமாற்றத்தில் உள்ள பிரேமலதா EPS-ஐ தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட தேமுதிக திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 7 தொகுதிகளை வழங்க திமுக தயார் எனவும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளில் இது உறுதி செய்யப்படும் என்றும் தெரிகிறது.
News September 1, 2025
இல்லத்தரசிகள் பணத்தை சேமிக்க ‘4’ டிப்ஸ்..

*வீட்டின் EB பில்லில் கவனமாக இருங்க. தேவையற்ற நேரத்தில் ஃபேன், பல்பு, லைட், டிவி Off செய்யுங்கள்.
*அதிகமாக சமையல் பொருள்களை கொண்டு சமைத்து, அதனை யாரும் சாப்பிடாமல் வீணடிக்க வேண்டாம். *சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், அது பல நேரங்களில் உதவும்.
*பண்டிகை காலங்களில் அதிகப்படியான துணியோ, பொருள்களோ வாங்கிக் குவிக்க வேண்டாம். தேவைக்கேற்ப வாங்குங்கள். SHARE IT.
News September 1, 2025
தமிழகத்தில் புயல் சின்னம்.. மழை வெளுத்து வாங்கும்

வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மேலும், காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றிரவு கரூர், திருச்சி, கோவை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.