News May 5, 2024
3ஆம் கட்ட பிரசாரம் இன்று ஓய்கிறது

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறவுள்ளதால் தலைவர்கள் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 1351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
Similar News
News September 1, 2025
பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

செப்டம்பர் 5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மிலாடி நபியையொட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், இந்த வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை சேர்த்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு 3 நாள்கள் தொடர் விடுமுறையாகும். இம்மாதத்தில் காலாண்டு தேர்வுகள் வருவதால் மாணவர்கள் பரீட்சைக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். சொந்த ஊர் செல்ல நினைப்பவர்களும் இந்த விடுமுறையை பயன்படுத்திக் கொள்ளலாம். SHARE IT.
News September 1, 2025
SPACE: விண்வெளியில் குழந்தை பெற்றெடுக்க முடியுமா?

விண்வெளியில் குழந்தை பெறுவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதே உண்மை. விண்வெளியில் ஈர்ப்பு விசை மிக மிக குறைவாக இருப்பதும், காஸ்மிக் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதும் இதற்கு காரணங்களாகும். ஈர்ப்பு விசை இல்லாதது பிரசவ செயல்பாட்டை பாதிக்கும். காஸ்மிக் கதிர்வீச்சோ நமது DNA-களை சேதமாக்குவதுடன், செல்களிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனினும், இதை சமாளிக்கும் டெக்னாலஜி விரைவில் சாத்தியமாகும் என நம்பலாம்.
News September 1, 2025
திமுக கூட்டணியில் தேமுதிக ?

2026 தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணையவுள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்ய சபா சீட் தராததால் ஏமாற்றத்தில் உள்ள பிரேமலதா EPS-ஐ தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட தேமுதிக திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 7 தொகுதிகளை வழங்க திமுக தயார் எனவும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளில் இது உறுதி செய்யப்படும் என்றும் தெரிகிறது.