News January 12, 2026

நாமக்கல் அருகே இப்படியா..? சிக்கிய 2 வாலிபர்கள்!

image

நாமக்கல்: திருச்செங்கோட்டை அடுத்த உஞ்சனை பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் சேலத்தைச் சோ்ந்த ராகுல் (24), ஜீவா (27) என்பது தெரியவந்தது. இவா்கள் மோளிப்பள்ளி பகுதியில் உள்ள தனியாா் சோலாா் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்ததும், அங்கு பணியாற்றும் ஒடிஸா மாநிலத்தவா்களுடன் இணைந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

Similar News

News January 27, 2026

நாமக்கல்: மானியத்துடன் ₹3.50 லட்சம் கடன் வேண்டுமா? CLICK NOW

image

நாமக்கல் மக்களே தமிழ்நாடு அரசின் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது. இதில் 35% அல்லது அதிகபட்சம் ₹3.50 லட்சம் மானியம் உண்டு. தவணை தவறாமல் செலுத்துவோருக்கு 6% வட்டி மானியமும் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட மேலாளரை அணுகலாம். யாருக்காவது பயன்படும் SHARE IT

News January 27, 2026

POWER CUT: நாமக்கல்லில் இங்கு மின்தடை

image

நாமக்கல்லில் நாளை (ஜன.28) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது.ஜேடர்பாளையம், வடகரையாத்துார், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்,நல்லுார், திடுமல், கந்தம்பாளையம், நகப்பாளையம், சுருந்தேவம்பாளையம், மணியனுார், வைரம்பாளையம், கொண்டரசம்பாளையம், கோலாரம் பாளையம் பகுதியில் நாளை காலை 9மணி முதல் மாலை 4மணி வரை மின்தடை ஆகும்.

News January 27, 2026

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.15- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை கடந்த நான்கு நாட்களாக ஏறுமுகத்தில் உள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!