News January 12, 2026
இவர் தூய்மை பணியாளர் மட்டுமில்ல.. தூய்மையானவர்!

மனித மனம் எப்போதும் தடுமாறக்கூடியதே. ஆனால், சென்னையை சேர்ந்த பத்மா, தன் வேலையை போலவே மனதளவிலும் தூய்மையானவராகவே உள்ளார். சென்னை தி.நகரில் அவர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போது, 45 சவரன் தங்க நகைகள் கிடைத்துள்ளன. உடனே, அதனை அவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். சுமார் ₹48 லட்சம் மதிப்பிலான நகைகளை தவறவிட்ட ரமேஷ் என்பவரிடம் நகை ஒப்படைக்கப்பட, பத்மாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. Salute மேடம்!
Similar News
News February 6, 2026
BREAKING: தேர்தல் கூட்டணி.. கிருஷ்ணசாமி அறிவித்தார்

கூட்டணி விவகாரத்தில் ஆட்டம் காட்டி வரும் கிருஷ்ணசாமி, புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் வலுவான வெற்றிக் கூட்டணி அமையும் என்றும் கூறினார். குறிப்பாக, புதிய தமிழகம் கட்சிக்கு தனித்தொகுதி மட்டுமின்றி பல தொகுதிகளில் கணிசமான வாக்குகள் இருப்பதால் தென் தமிழகத்தில் அதிகம் போட்டியிடுவோம் என்றார். உங்கள் கருத்து?
News February 6, 2026
திமுக தேர்தல் அறிக்கை.. இதெல்லாம் இடம்பெறுமா?

தேர்தல் நெருங்குவதால் தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் பணியில் திமுக மும்முரம் காட்டிவருகிறது. இந்நிலையில், இந்த அறிக்கை மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதில், மகளிர் தொகையை உயர்த்துவது, முஸ்லீம்கள் தனி இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவது, கல்விக் கடன், தொழில் கடன், முதியோர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்டவை பற்றி முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 6, 2026
பொறாமை கொண்டவர்களை அடையாளம் காண 4 டிப்ஸ்!

★ஒரு நல்ல செய்தியைப் பகிரும்போது, அவர்களின் கண்களில், முகபாவனைகளில் உண்மையான மகிழ்ச்சி இருக்காது ★கடினமாக உழைத்து ஒரு இலக்கை அடைந்தால், அதிர்ஷ்டம் என்று ஈசியாக கூறிவிடுவார்கள் ★பொறாமை கொண்டவர்கள் உங்கள் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க எதிர்மறையான வதந்திகளைப் பரப்ப முயற்சிப்பார்கள் ★உங்களை புறக்கணித்து மற்றவர்களுடன் பேசுவது பொறாமையின் மற்றொரு அறிகுறி. கவனமா இருங்க!


