News May 5, 2024
சமூக ஆர்வலர் பொருளுதவி

வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்த சுந்தரி சிதிலமடைந்த குடிசையில் வாடகைக்கு வசிக்கிறார். இவருக்கு மாற்றுத்திறனாளி மகன் மற்றும் மகள் ஒருவர் இருக்கின்றனர். இவருக்கு எந்த ஒரு அரசு நிவாரணமும் கிடைப்பதில்லை. இதையறிந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் அவர்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார். மேலும் அந்த குடும்பத்திற்கு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளி பென்ஷன், தங்க வீடு அரசு வழங்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
Similar News
News December 26, 2025
வேலூர்: விவசாயி மின்சாரம் தாக்கி பலி!

வேலூர், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியை சேர்ந்த சேகர் வயது 70 இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்தநிலையில் நேற்று (டிச.25) மாலை விவசாய நிலத்தில் உள்ள மின்மோட்டரை இயக்க சென்றுள்ளார். அப்போது மின் மோட்டார் இயங்காததால் அருகிலுள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதை சரி செய்ய முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி விவசாயி சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
News December 26, 2025
வேலூர்: கால்வாயில் மிதந்த ஆண் பிணம்!

பொன்னை ஆற்றில் இருந்து கீரைசாத்து ஏரிக்கு ஆற்றுநீர் செல்லும் கால்வாயில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக பொன்னை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த விசாரணையில், அந்நபர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (32) என்பது தெரியவந்தது. மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 26, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி இன்று (டிச-25) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


