News January 12, 2026

நாமக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

நாமக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

Similar News

News February 11, 2026

நாமக்கல்: மாற்றம் இன்றி நீடிக்கும் முட்டை விலை

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.25-ஆக விற்பனையாகி வந்தது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (பிப்.10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி நீடிக்கிறது. முட்டை விலை மாற்றம் இன்றி நீடிப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News February 10, 2026

நாமக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

நாமக்கல் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News February 10, 2026

BREAKING: நாமக்கல்லில் கையும் களவுமாக சிக்கிய அதிகாரி!

image

நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளர் சங்கர்,விவசாயி ஒருவரிடம் சொத்துவரி விதிக்க ரூ.20,000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த அதிரடி நடவடிக்கையால் மாநகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மக்களே, உங்களிடம் அரசு அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்டால் 04286-281331 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!