News January 12, 2026

வேலூரில் சிறுத்தை நடமாட்டமா?

image

குடியாத்தம் அடுத்த ராகிமானபல்லி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சுரேஷ் என்பவருக்கு சொந்தமான கால்நடைகள் கத்தியுள்ளன. இதனால் சந்தேகமடைந்த சுரேஷ் வெளியே வந்து பார்த்தபோது சிறுத்தை ஒன்று சற்று தொலைவில் திரிந்து கொண்டிருந்தது. உடனடியாக கிராம மக்கள் கும்பலாக சத்தமிட்டு வந்த உடன் சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடியது. இது குறித்து வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News February 6, 2026

வேலூர் மாவட்டத்தில் நெல் விலை நிலவரம்!

image

வேலூர் டோல்கேட் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நெல் மூட்டைகளின் இன்று (பிப்ரவரி 06) விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 75 கிலோ நெல் மூட்டைகளில் ஆர்என்ஆர் ரூ.1600 முதல் 2320,  வரையும், மகேந்திரா 606 ரகம் ரூ.1932 முதல் 2319, வரை, நர்மதா ரூ.1920 முதல் 2318 வரையும், மனிலா (80 கிலோ) ரூ.9005 முதல் 10049 வரையும், கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.135 முதல் 195 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News February 6, 2026

வேலூர் கலெக்டர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம்

image

வேலூர் மாவட்டத் தொலைநோக்கு திட்டம் – 2030, கருத்துகேட்பு கூட்டம் இன்று (பிப்.6) நடந்தது. இந்த நிகழ்ச்சியை கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பேசினார். இதில் எம்பி கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News February 6, 2026

வேலூர்: செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!