News May 5, 2024
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் – கணக்கெடுப்பு துவக்கம்

கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பிதற்காக மத்திய அரசால் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022 ல் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கும் பணி மாவட்ட வாரியாக நடைபெற உள்ளது. அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு தொடங்கியது.
Similar News
News August 22, 2025
பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கை தேதி நீட்டிப்பு

கோவை மாவட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் பேரூரில் அரசு ஐடிஐ புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அட்வான்ஸ் சிஎன்சி இயந்திர தொழில்நுட்ப பணியாளா், மெக்கானிக், வயா்மேன் போன்ற பிரிவுகளுக்கு நடப்பாண்டுக்கான நேரடி சோ்க்கைக்கு 8, 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தேதி ஆக.31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
கோவை: இதை செய்தால் புகார் அளிக்கத் தயங்காதீர்கள்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் வீட்டுமனையை வரன்முறைப்படுத்த ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வரி வசூலர் சதீஷ்குமார் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதே போல் உங்களிடம் ஏதேனும் அரசு அதிகாரிகள் பணமாகவோ அல்லது பொருளாகவோ லஞ்சம் கேட்டல் 0422-2449550 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். இந்த முக்கிய எண்ணை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News August 22, 2025
டிப்ளமோ துணை கலந்தாய்வுக்கு மீண்டும் விண்ணப்பம்

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில், பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் https://tnau.ucanapply.com இணையதளத்தின் மூலமாக துணை இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.