News January 12, 2026

சென்னை: சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்

image

செம்பியம் பகுதியில் கடைக்குச் சென்று திரும்பிய 10-ஆம் வகுப்பு மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (40) என்பவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், செம்பியம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் கந்தசாமியை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News January 30, 2026

சென்னை ஏரிகளின் தற்போதைய நிலவரம்!

image

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான ஏரிகளின் இன்றைய நீர் இருப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி பூண்டி ஏரி தனது முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3363 மி.கன அடியும், புழல் ஏரியில் 3032 மி.கன அடியும் நீர் இருப்பு உள்ளது. சோழவரம் ஏரியில் 536 மி.கன அடியும், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் 422 மி.கன அடியும், வீராணம் ஏரியில் 914 மி.கன அடி நீர் உள்ளது.

News January 30, 2026

சென்னையில் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

image

சென்னை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

சென்னை: உங்கள் வீட்டில் சிலிண்டர் உள்ளதா?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

error: Content is protected !!