News January 12, 2026
கிருஷ்ணகிரியில் 4 பேர் அதிரடி கைது!

காமன்தொட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பிரவீன்குமார் (38). கடந்த 7-ம் தேதி காமன்தொட்டி நெடுஞ்சாலையில் 5 பேர் தங்களை போலீசார் என கூறி, பிராவின் குமாரை காரில் கடத்தியுள்ளனர். மேலும் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டினர். சுதாரித்து கொண்ட பிரவீன் பணம் காரில் உள்ளது எடுத்து வருகிறேன் என கூறி தப்பினார். இதையடுத்து போலீசார் மல்லேஷ், நெல்சன் (42), வரதராஜன் (30), ராஜசேகர் (50) ஆகியோரை கைது செய்தனர்.
Similar News
News February 6, 2026
ஓசூரில் அரசு பேருந்து விபத்து; ஒருவர் பலி

ஓசூரில் இருந்து அரசு பேருந்து பெங்களூர் நோக்கி நேற்று (பிப்-05) சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் பேருந்தில் பயணித்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாதேஷ் (46) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 5, 2026
கிருஷ்ணகிரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News February 5, 2026
கிருஷ்ணகிரி: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே<


