News January 12, 2026
நீலகிரி: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

நீலகிரி மாவட்டம் கூடலூர் மார்த்தோமா நகர் புனித தாமஸ் மேல்நிலை பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி எம்பி நாளை வரவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய உறுப்பினரும், தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளருமான கோசி பேபி தலைமையில் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.
Similar News
News January 27, 2026
ரூ.1லட்சம் பரிசு: அறிவித்தார் நீலகிரி கலெக்டர்

திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் ஏப்.15ம் தேதி மாநில அளவிலான விருதினை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருது பெற விரும்பும் நபர்கள் வரும் பிப்.18ம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.1 லட்சம் காசோலை (ம) பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
News January 27, 2026
நீலகிரி: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா? APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News January 27, 2026
உதகையில் மக்கள் கடும் அவதி

உதகையில் நேற்று திடீரென மூடுபனியுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் நிலவிய கடும் குளிரின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. சாரல் மழையுடன் மூடுபனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.


