News January 12, 2026
திருவள்ளூரில் மர்ம சாவு!

நேதாஜி சாலையில் வசித்து வந்தவர் குமரன்(39). திருவாலங்காடு காவல் நிலையத்தில் அமைச்சுப் பணி பெற்று பணி புரிந்து வந்தார். இவருக்கும் சர்மிளா(32) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக தம்பதி பிரிந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி குமரன் மர்ம முறையில் வீட்டின் அருகே இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News January 30, 2026
திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

பொன்னேரி அடுத்த தொட்டிமேடு கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(60). மீனவரான இவர் பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்ற ராஜேந்திரன் ஏரியில் மூழ்கி பலியானார். அவரது உடலை மீட்ட திருப்பாலைவனம் போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 30, 2026
திருவள்ளூர்: கணவர் கண் முன்னே மனைவி பலி!

பொன்னேரி பகுதியைச் சேர்ந்த ராமராஜ் – வித்யா தம்பதி. இவர்கள் திருப்பதியில் நடந்த உறவினர் திருமணத்தில் பங்கேற்க பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் சுருட்டபள்ளியில் உள்ள சோதனைச் சாவடி அருகே பைக்கின் சக்கரத்தில் வித்யாவின் துப்பட்டா சிக்கியதில் தடுமாறி விழுந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் கணவர் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
News January 30, 2026
திருவள்ளூர்: இரவு ரோந்து காவல் அதிகாரி எண்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


