News January 12, 2026

மதுரை: மயங்கி விழுந்து பெண் பலியான சோகம்..

image

மேலூர் வினோபா காலனியை சேர்ந்தவர் துரைப்பாண்டி மனைவி அழகம்மாள்(35). இவருக்கு நுரையீரல் மற்றும் உப்புச்சத்து நோய் ஏற்பட்டது. நேற்று முன்தினம் (ஜன.10) இவர் வீட்டில் மயங்கி விழுந்ததால், மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 5, 2026

மேலூர் அருகே லாரி, கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி : 4 பேர் காயம்

image

சிவகங்கை நாட்டரசன் கோட்டை கண்ணன்(54) பூக்கடை வைத்துள்ளார். இவரது மகன் கோபியுடன்
காரில் இன்று அதிகாலை 2 மணிக்கு மேலூர் நான்கு வழிச்சாலையில் சென்றனர். தெற்குபட்டி அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர்களது  பூக்கடையில் வேலை பார்த்து வரும் பாண்டி, சாகுல், மணி, குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 5, 2026

மதுரையில் பரபரப்பு…..12 வயது சிறுவன் தற்கொலை.!

image

கொட்டாம்பட்டி அருகே அலங்கம்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் மகன் லிங்கேஸ்வரன்(12). வீட்டில் உள்ள சைக்கிளை ஓட்டுவதில் அவரது இளைய சகோதரருடன் தகராறு செய்துள்ளார். இதைப் பெற்றோர் கண்டித்தனர். இதில் கோபம் அடைந்த லிங்கேஸ்வரன் வீட்டில், நைலான் கயிறு எடுத்து தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 5, 2026

மதுரை மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

image

மதுரை மக்களே., உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்

error: Content is protected !!