News January 12, 2026
ராமநாதபுரம்: லாரி மோதியதில் ஒருவர் பலி

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று காரில் ராமேவரத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போது பாப்பாகுடி பகுதியில் முன்னாள் சென்ற காரை முந்த முயன்ற போது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் சென்ற சிவ்சரன்பால்(60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கார் ஓட்டுநர் யாஸ்சர்மா, லாரி ஓட்டுநர் டெக்கரேஸ்வரன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 24, 2026
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 23) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News January 23, 2026
இராம்நாடு: ரூ.520 செலுத்தினால் ரூ.10 லட்சம் மருத்துவக் காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். *SHARE
News January 23, 2026
ராமநாதபுரம்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

ராமநாதபுரம் மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.


