News May 5, 2024

மீனவர்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு

image

மண்டபம் மீனவர் நலத்துறை நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கடலில் 45 – 65 கிமீ வேகத்துடன் காற்று வீசும். கடல் கொந்தளிப்பால் 1.5., உயரத்துக்கு அலை எழக்கூடும். இதனால்
மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம். மேலும், கடலில் யாரும் குளிக்க செல்ல வேண்டாம். காற்று வேகத்தால் படகுகள் சேதமடையக்கூடும் என்பதால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2025

வழிவிடு முருகன் ஆலயத்தில் திரைப்பட பூஜை துவக்கம்

image

சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி மகன் ஜித்தன் ரமேஷ் நடிக்கும் போர்கள் ஓய்வதில்லை திரைப்பட பூஜை ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலயத்தில் நேற்று காலை நடந்தது. இதில் இருட்டுக்கு கண் இருக்கு உள்பட குறும்பட யூடியூப் நடிகர் மண்டபம் எம் எஸ் ராஜ், அமமுக தலைமை கழக பேச்சாளர் மண்டபம் ராஜா முஹமது உள்பட பலர் பங்கேற்றனர்.

News April 20, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஏப்ரல் 19) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X  வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News April 19, 2025

இராமநாதபுரம்: கோடை கால இலவச பயிற்சி முகாம் – ஆட்சியர்

image

இராமநாதபுரம், சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கத்தில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே.15 வரை (21 நாட்கள்) காலை, மாலை இரு வேளைகள் நடைபெறும். இதில், தடகளம், ஹாக்கி, டென்னீஸ், இறகுப்பந்து, ஜூடோ, இதர விளையாட்டுகளுக்கு இலவச பயிற்சி & அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலத்தில் பெயரை பதிவு செய்ய வேண்டும் – ஆட்சியர் (18 வயதிற்குட்பட்டவர்கள்)*ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!