News January 12, 2026

கரூரில் அருகே விபத்து: இளைஞர் பலி

image

கரூர் அருகே பைக்கில் சென்ற பிரகாஷ் (26) என்பவர், முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தான்தோன்றிமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 5, 2026

கரூர்: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

கரூர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் கரூர் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04324-255340 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News February 5, 2026

கரூர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்! APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<> கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (இதை அதிகம் ஷேர் பண்ணுங்க)

News February 5, 2026

தோகைமலை அருகே தட்டி தூக்கிய போலீஸ்: இருவர் கைது

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்.டி மலை, கீழவெளியூர் கடைவீதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் லாட்டரி விற்ற வேலு 61, ராஜேந்திரன் 55 ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் ஏற்கனவே தலா 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!