News January 12, 2026

நீலகிரி: பூட்டிய வீட்டில் எலும்புக்கூடு: விசாரணை!

image

நீலகிரி: கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு, 13 ஆண்டுகளாக பூட்டிய வீட்டினுள், அடையாளம் தெரியாத ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணையை துவக்கிய போலீசார், நீண்ட நாட்களாக வீடு பயன்படுத்தப்படாமல் இருந்த காரணத்தினால், மதுப்பிரியர்கள் அதை உபயோகப்படுத்தி வந்திருக்கலாம் எனவும், காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.

Similar News

News January 21, 2026

நீலகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டம் பிங்கர் போஸ்ட் அருகில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 23ஆம் (வெள்ளிக்கிழமை ) தேதி காலை 11:30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்ட விவசாயிகள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் முகாமில் கலந்துகொண்டு தெரிவிக்கலாம்.

News January 21, 2026

குன்னூர் நகராட்சி ஆணையர் அதிரடி கைது!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில், கட்டிட பணிக்கு அனுமதி வழங்க, நகராட்சி ஆணையர் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின்பேரில் குன்னூர் நகராட்சி ஆணையாளர் இளம்பருதி மற்றும் உதவியாக இருந்த நகராட்சி இளநிலை உதவியாளர் விக்னேஷ் ஆகிய இருவரையும், லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

News January 21, 2026

நீலகிரி குறைதீர்த்த நாள் கூட்டத்தில் குவிந்த 98 மனு

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 98 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதற்குரிய அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

error: Content is protected !!