News January 12, 2026
2026-ன் முதல் மெகா சம்பவம்.. சீறும் PSLV!

2026-ம் ஆண்டின் முதல் விண்வெளி ஏவுதல் இன்று நடைபெற உள்ளது. PSLV-C62 ராக்கெட் மூலம் இன்று 16 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. இதில், ‘EOS-N1 Anvesha’ எனப்படும் DRDO-ல் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள், இந்தியாவின் கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இது தவிர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 வணிக செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
Similar News
News February 19, 2026
கூடுதலாக ₹2000.. யார் யாருக்கு கிடைக்கும்

கோடைக்கால சிறப்பு நிதி ₹2000 யார் யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்துள்ளார். கோடைக்காலத்தில் வெயில் காரணமாக மக்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளவும், சத்தான உணவுகள், மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யவும், மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களுக்கு கோடைக்கால சிறப்பு நிதி ₹2000 வழங்கப்படும் என்றார்.
News February 19, 2026
திமுக-தேமுதிக கூட்டணி.. தவெக ரியாக்ஷன்

விஜயகாந்தின் கொள்கைகளுக்கு எதிராக தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்திருப்பதாக CTR நிர்மல்குமார் விமர்சித்துள்ளார். திமுகவையும், அதன் குடும்ப அரசியலையும் அப்புறப்படுத்தும் நோக்கில் தேமுதிகவை தொடங்கிய விஜயகாந்த், அதற்காக இறுதிவரை போராடியதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், தற்போது அரசியலை ஒரு தொழிலாக DMDK மாற்றிவிட்டதாகவும், அதிக லாபம் கிடைக்கும் இடத்தில் அவர்கள் கூட்டணி அமைத்திருப்பதாகவும் சாடினார்.
News February 19, 2026
நகைக் கடன் தள்ளுபடி முடிவு.. ஹேப்பி நியூஸ்

மகளிர் வங்கிக் கணக்கில் ₹5,000 டெபாசிட் செய்து TN அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில், நகைக் கடன் தள்ளுபடி குறித்த தேர்தல் வாக்குறுதிக்காக மக்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, கூட்டுறவு வங்கிகளில் நிலுவையிலுள்ள நகைக் கடன் விவரங்களை TN அரசு கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், நகைக் கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


