News January 12, 2026

இந்தியாவை பாதுகாக்கும் அரண் PM மோடி: அம்பானி

image

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலையிலும், நம்மை பாதுகாக்கும் ஒரு அரணாக PM மோடி இருப்பதாக அம்பானி தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியா வரலாற்றில் இத்தகைய ஒரு தன்னம்பிக்கையையும், ஆற்றலையும் முன்னெப்போதும் பார்த்ததில்லை. அடுத்த 50 ஆண்டுகளுக்கான இந்தியாவின் பாதையை அவர் வடிவமைத்துள்ளார். மோடி சகாப்தத்தை வரலாறு பதிவு செய்யும் என்றும் அம்பானி தெரிவித்துள்ளார்.

Similar News

News February 6, 2026

WC-ல் இருந்து விலகுகிறாரா ஹர்ஷித் ராணா?

image

WC பயிற்சி ஆட்டத்தின் போது ஹர்ஷித் ராணாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட உள்ளதால், அவர் WC-ல் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ராணா ஆல்ரவுண்டர் என்பதால் அவருடைய விலகல் இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

News February 6, 2026

விஜய் மீது இல்லாத குற்றங்களை சுமத்தி வருகின்றனர்: CTR

image

திமுவின் கைக்கூலிகளாக இருக்கும் அதிமுக தலைவர்கள் தான் தவெகவை விமர்சிக்கிறார்கள் என CTR நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். <<19046133>>திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்<<>> குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், விஜய் மீது வேறு குறைகள் எதுவும் சொல்ல முடியாததால் இல்லாத களங்கங்களை சொல்லி வருகிறார்கள் என தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு பிறகு மக்கள் அதிமுகவை புறக்கணித்து நீண்ட காலமாகிவிட்டது எனவும் விமர்சித்துள்ளார்.

News February 6, 2026

முன்னாள் எம்எல்ஏ லிங்கமுத்து காலமானார்

image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் லிங்கமுத்து(75), உடல்நலக் குறைவால் இன்று காலமானார். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய முகங்களில் ஒருவராக விளங்கிய இவர், CPI-ன் மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார். 2011 தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றிருந்தார். லிங்கமுத்து மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!