News January 12, 2026

சேலத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

image

சேலத்தில் அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி தனியார் நிறுவனங்களில் உள்ள 5000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக, வேலைவாய்ப்பு முகாமினை வருகின்ற 24.01.2026 அன்று காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை சேலம் சோனா கல்வி குழும வளாகத்தில் இலவசமாக நடத்துகிறது. வேலையில்லா இளைஞர்கள் இதை பயன்படுத்தி கொள்ளவும். SHARE IT

Similar News

News January 30, 2026

BREAKING: ஆத்தூரில் தாய், மகள் தற்கொலை

image

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (57). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 12 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். லட்சுமிக்கு 6 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதில் 5 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், 3-வது மகள் தீபவேணிக்கு திருமணம் ஆகாதது மற்றும் கடன் தொல்லை அதிகரித்தது மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாயும், மகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

News January 30, 2026

POWER CUT: சேலம் மாவட்டத்தில் இங்கெல்லாம் மின்தடை

image

சேலம் மாவட்டத்தில் இன்று (ஜன.30) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, இடைப்பாடி, ஆவணியூர், முப்பனூர், சவுரிபாளையம், தாதாபுரம், ஜலகண்டபுரம், நந்தவனம், ஆடையூர், ராமகவுண்டனூர், விராலிகாடு, பூசாரியூர், செலவடை, மின்னாம்பள்ளி, காட்டூர், வலசையூர், தாதனூர், பூசாரிப்பட்டி, செல்லியம்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர், வீரகவுண்டனூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகள் ஆகும்.

News January 30, 2026

சேலம் GH-ல் லஞ்சத் தொல்லை? பரபரப்பு புகார்

image

சேலம் அரசு மருத்துவமனையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் கிரிஸ்டல் நிறுவனத்தினர், நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், தாக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். லஞ்சத் தொல்லை மற்றும் அத்துமீறல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!

error: Content is protected !!