News January 12, 2026
வீட்டில் ஆண் எலும்புக்கூடு: போலீசார் விசாரணை துவக்கம்

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு, 13 ஆண்டுகளாக பூட்டிய வீட்டினுள், அடையாளம் தெரியாத ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணையை துவக்கிய போலீசார், நீண்ட நாட்களாக வீடு உபயோகப்படுத்தப்படாமல் இருந்த காரணத்தினால், மது பிரியர்கள் யாரேனும் அதை உபயோகப்படுத்தி வந்திருக்கலாம் எனவும், மேலும் காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
Similar News
News January 30, 2026
நீலகிரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் .அல்லது<
News January 30, 2026
நீலகிரி கலெக்டர் அதிரடி உத்தரவு

வடலூர் ராமலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 1-ம் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்ட செய்தி குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மதுபான டாஸ்மாக் கடைகள் வரும் 1-ம் தேதி வடலூர் ராலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு மூட வேண்டும். இந்நாளில் உத்தரவை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
News January 30, 2026
மரண பயத்தில் பந்தலூர் மக்கள்

பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டை பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் மாலை இப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்ட இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, இப்பகுதியில் உள்ள புலியை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


