News January 12, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News January 22, 2026
சற்றுமுன்: விஜய்க்கு அதிர்ச்சி

சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கு பொதுச் சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ECI-யின் புதிய விதிமுறைகளின்படி, கட்சியின் வரவு செலவு கணக்கு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், தவெக இதை தவறவிட்டதாகவும், இதனால் பொதுச் சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பொதுச் சின்னம் இல்லையென்றால் ஒவ்வொரு வேட்பாளரும் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும்.
News January 22, 2026
நான் திமுகவிலா.. வெல்லமண்டி நடராஜன்

வைத்திலிங்கம் நேற்று திமுகவில் இணைந்தார். அவருடன் வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர் இணையவில்லை. இதுகுறித்து பேசிய அவர், நான் திருச்சியில் தான் இருக்கிறேன். எனக்கு திமுகவில் சேரும் எண்ணம் இல்லை. OPS உடன் தொடர்ந்து பயணிப்பேன் என்று அவரது ஆதரவு யாருக்கு என்பதை தெளிவுப்படுத்தினார்.
News January 22, 2026
தமிழகத்தில் சிக்குன்குனியா பரவல் அதிகரிப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிக்குன்குனியா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த ஹாஸ்பிடல்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல், இருமல், உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொசு உற்பத்தியை தடுக்க வீடுகளில் நீர் தேங்காமல் தடுப்பது அவசியம்.


