News January 11, 2026

ஒரே நாளில் விஜய்க்கு காத்திருக்கும் சோதனை

image

நாளை விஜய்க்கு மிக முக்கிய நாளாகும். கரூரில் 41 பேர் பலியான துயரம் தொடர்பான வழக்கில் டெல்லியில் உள்ள CBI அலுவலகத்தில் விஜய் நாளை நேரில் ஆஜராகிறார். இதற்காக நாளை காலை தனி விமானம் மூலம் அவர் டெல்லி செல்லவுள்ளார். அதேநேரம், ‘ஜன நாயகன்’ படத்துக்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்கக் கோரிய மேல்முறையீட்டு மனு, அவசர வழக்காக நாளை விசாரணைக்கு வரவுள்ளதால், ஒட்டுமொத்த பார்வையும் விஜய் மீதே உள்ளது.

Similar News

News January 31, 2026

பிப்ரவரியில் வானில் நிகழும் அற்புதங்கள்!

image

பிப்ரவரி மாதம் வானில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பிப்ரவரி 1 – பனி நிலவு, பிப்ரவரி 17 – சூரிய கிரகணம், பிப்ரவரி 18 – மிக மெல்லிய பிறை நிலவு புதன் கோளுக்கு அருகில் தோன்றும், பிப்ரவரி 19 – சனி கிரஹம் நிலவுக்கு அருகில் தோன்றும், பிப்ரவரி 28 – புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் வான்வெளியில் ஒரு வில் போன்ற வடிவில் அணிவகுக்கும்.

News January 31, 2026

பிப்ரவரி முதல் அரசு மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

image

தமிழக அரசு மாதிரிப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை பிப்ரவரியில் (திங்கள்கிழமை முதல்) தொடங்கவுள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல் பிப்ரவரி 2-வது வாரம் வெளியாகும். அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை மே மாதத்தில் தொடங்கவுள்ளது. நவீன உள்கட்டமைப்புகளுடன் செயல்படும் அரசு மாதிரிப் பள்ளிகளில் நீட், JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

News January 31, 2026

நாடு முழுவதும் ஸ்டிரைக்

image

8-வது ஊதியக் குழு, ஓய்வூதியம் மற்றும் பணியாளர் நியமனம் தொடர்பான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், பிப்.12-ல் வேலைநிறுத்தம் செய்யப்படும் என மத்திய அரசு ஊழியர்கள் & தொழிலாளர்கள் கூட்டமைப்பு (CCGEW) அறிவித்துள்ளது. வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை என்பதை உறுதி செய்யக்கோரி, சமீபத்தில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது மத்திய அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!