News January 11, 2026

இனி தங்கம் கிடைப்பது ஈசி!

image

விலை அதிகரிப்பதால் Gold-ல் இனி Marie Gold மட்டும்தான் வாங்க முடியும் என சோர்ந்தவர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ். பயன்படுத்தப்பட்ட செல்போன், சர்க்யூட் போர்டுகள் உள்ளிட்ட E-waste-ல் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் முறையை சீனா கண்டுபிடித்துள்ளது. இந்த டெக்னாலஜி மூலம், பெரும் சவாலாக இருக்கும் E-waste-ஐ குறைப்பது மட்டுமின்றி, தங்கம் எடுக்க செலவாகும் தொகையும் குறையும் என கணிக்கின்றனர்.

Similar News

News February 15, 2026

₹5000 மகளிர் உரிமைத் தொகை.. இந்த மெசேஜ் வந்துவிட்டதா!

image

தேர்தல் நெருங்குவதால் முன்கூட்டியே 3 மாத உரிமைத் தொகை ₹3,000 & கோடைக்கால சிறப்புத் தொகுப்பு ₹2,000 சேர்த்து ₹5,000 ஆக மகளிரின் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆனது. இந்நிலையில் மகளிருக்கு CM ஸ்டாலினிடம் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அன்பு சகோதரிக்கு வணக்கம்; உரிமைத் தொகை திட்டத்தில் வரவுவைக்கப்பட்ட ₹5,000-ஐ அத்தியாவசிய தேவை, சேமிப்புக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

News February 15, 2026

நயினார் பேச்சு அருவருப்பு மனநிலையின் உச்சம்: காங்., MP

image

நடிகையுடன் ஒப்பிட்டு விஜய்யை நயினார் நாகேந்திரன் பேசியதை ஜோதிமணி கடுமையாக கண்டித்துள்ளார். கட்சித் தலைவர் மீது உங்களுக்கு விமர்சனங்கள் இருந்தால் கருத்து ரீதியாக அவரை எதிர்கொள்ளுங்கள் என்ற அவர், அதைச்செய்ய முடியாமல் ஒரு பெண்ணை ஆபாசமாகப் பொதுவெளியில் பேசுவது அருவருக்கத்தக்க மனநிலையின் உச்சம் என சாடியுள்ளார். நயினார் தனது கருத்துக்கு பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

News February 15, 2026

இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்குமா?

image

பல தடைகளை தாண்டி இன்று நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கு வருண பகவான் ஒத்துழைப்பாரா என்பதுதான் தெரியவில்லை. ஆமாங்க, போட்டி நடைபெறும் கொழும்புவில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தடையின்றி போட்டி நடந்தால் பேட்டிங், பவுலிங்கில் வலுவாக உள்ள இந்தியாவே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!