News January 11, 2026

PM மோடிக்கு CM ஸ்டாலின் அவசர கடிதம்

image

இலங்கை தமிழரின் உரிமையை பாதுகாக்க உரிய தூதரக நடவடிக்கையை PM மோடி எடுக்க வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த கடிதத்தில் அவர் இலங்கை அரசு இனப்பிரச்னையை தீர்க்கும் போர்வையில், ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக சாடியுள்ளார். இது ஒற்றையாட்சி முறையை வலுப்படுத்துவதால், அரசியல் சுயாட்சிக்கான தமிழரின் நியாயமான எண்ணங்கள் புறக்கணிக்கப்படலாம் என சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார்.

Similar News

News February 1, 2026

குழந்தைகளின் நேரத்தை திருடும் ஸ்மார்ட் போன்

image

குழந்தைகளின் ஸ்மார்ட் போன் பயன்பாடு குறித்து சமீபத்தில் வெளியான ஆய்வு அதிர்ச்சி அளிக்கிறது. அதன்படி 14- 16 வயதான 76% குழந்தைகள் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரீல்ஸ், கேமிங், சாட்டிங் என தினந்தோறும் 3- முதல் 6 மணி நேரத்தை செல்போனில் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் தூக்கம், சிந்தனை திறன், மனவலிமை உள்ளிட்டவற்றை பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.

News February 1, 2026

2019- 2025 வரை.. FM நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் கேலரி!

image

இன்று மத்திய பட்ஜெட்டை FM நிர்மலா சீதாராமன், 9வது முறையாக தாக்கல் செய்யவுள்ளார். 2019-ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வரும் அவர், அணிந்து வரும் புடவை, நாட்டின் ஏதோ ஒரு கலாச்சார பின்னணியை கொண்டதாக உள்ளது. இதுவரை FM நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தபோது எடுத்த போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை இடது பக்கமாக Swipe செய்து பார்க்கவும்.

News February 1, 2026

OFFICIAL: சினிமாவை விட்டு விலகுவதாக விஜய் அறிவிப்பு

image

விஜய், முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக தான் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது 33 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை விட்டு விலகுவது அவ்வளவு எளிதான முடிவு அல்ல என்றும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். விஜய் சினிமாவை விட்டு விலகுவது வருத்தம் அளிப்பதாக திரைத்துறையினர் பலரும் கவலை தெரிவித்திருந்தனர். விஜய் ஒரு சிறந்த நடிகர் என்று அரசியல் தலைவர்களும் கூறி வருகின்றனர். நீங்க மிஸ் பண்றீங்களா?

error: Content is protected !!