News January 11, 2026
‘பராசக்தி’ இணையத்தில் கசிந்தது.. படக்குழு அதிர்ச்சி

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ உலகமெங்கும் 1000-க்கும் அதிகமான தியேட்டர்களில் நேற்று வெளியானது. இந்நிலையில், ஒரே நாளிலேயே ‘பராசக்தி’ சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்துள்ளது. சிலமணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கானோர் அதை டவுன்லோட் செய்து பார்த்துள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுமாதிரியான சட்டவிரோத செயலை தவிர்க்கும்படி படக்குழுவும், தியேட்டர் உரிமையாளர்களும் அறிவுறுத்துகின்றனர்.
Similar News
News February 10, 2026
தஞ்சாவூரில் அரசு ஊழியர்களுக்கான மருத்துவ முகாம்

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கான மருத்துவ முகாம் இன்று (பிப்.10) நடைபெற்றது. இந்த முகாமை ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அரசு ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
News February 10, 2026
வாரத்திற்கு 2 முறை சிக்கன் சாப்பிட்டால் ஆபத்து..

100gm-க்கு குறைவாக சிக்கன் சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது, வாரத்திற்கு 300gm-க்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு 27% இறப்பு விகிதம் அதிகம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வாரத்திற்கு 2 முறைக்கு மேல் சிக்கன் சாப்பிடுபவர்களுக்கு கேன்சர் அபாயம் அதிகம் உள்ளதாம்; பெண்களை விட ஆண்களுக்கே இந்த பாதிப்பு அதிகமாம். பதப்படுத்தப்பட்ட சிக்கன் சாப்பிட்டால் இந்த ஆபத்து இரு மடங்காக அதிகரிக்குமாம். உஷாரா இருங்க.
News February 10, 2026
தேமுதிக மத்திய அரசில் பதவி கேட்கிறது: அதிமுக

தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக<<19093944>> L முருகன் அறிவித்த நிலையில்<<>>, அதனை திண்டுக்கல் சீனிவாசனும் உறுதி செய்துள்ளார். மத்திய அரசில் தேமுதிக பதவி கேட்பதால், பாஜகவிடமே பேசிக்கொள்ளும்படி அதிமுக தரப்பில் சொல்லிவிட்டோம் என கூறியுள்ளார். மேலும் தேமுதிகவின் எதிர்பார்ப்புகள், பிரச்னைகள் குறித்து மாநில அளவில் பேச முடியாததால், அக்கட்சியுடன் பாஜக தேசிய தலைமை பேசிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.


