News January 11, 2026
இங்கு நள்ளிரவிலும் சூரியன் மறையாது!

நார்வேயின் சோமராய் தீவில் சுமார் 69 நாள்கள் சூரியன் மறையாதாம். மே 20 முதல் ஜூலை 18 வரை, நள்ளிரவு 12 மணி என்றாலும் பகல் போலவே இருக்கும். இதை Midnight Sun என்கின்றனர். இதற்கு நேர்மாறாக நவ., -ஜன., வரை இருள் மட்டுமே நிலவும். Polar Night என அழைக்கப்படும் இந்த சீசனில் சூரிய ஒளியே இருக்காது. இத்தீவு வடதுருவத்தின் மிக அருகில் இருப்பதுதான் இதற்கு காரணமாம். மூன்று மாதம் இரவாகவே இருந்தால் எப்படி இருக்கும்?
Similar News
News January 30, 2026
ஜெயிக்க வைக்க மாட்டீங்களா? விஜய பிரபாகரன்

தேமுதிக நல்ல கட்சி, கேப்டன் நல்லவர் என சொல்றீங்க, அப்புறம் ஏன் ஜெயிக்க வைக்க மாட்டேங்குறீங்க என்று விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். உங்களுக்காக எவ்வளவோ உழைக்கிறோம் கொஞ்சம் சிந்தியுங்கள் என்ற அவர், நாலுக்கு நாலு ரூமில் உட்கார்ந்து நம்மை பார்த்து கேள்வி கேட்க இவர்கள் யார் என கேள்வி எழுப்பினார். விஜய பிரபாகரன் விருதுநகரில் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியானதால், அவரது பேச்சு கவனம் பெறுகிறது.
News January 30, 2026
டிகிரி போதும்.. வங்கியில் ₹32,000 சம்பளம்!

தேசிய விவசாய & கிராமப்புற வளர்ச்சி வங்கியில் 162 Development Assistant காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤வயது: 21- 35 வரை *கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ➤தேர்ச்சி முறை: முதல்நிலை, முதன்மை & மொழித் திறன் தேர்வுகள் நடைபெறும் ➤சம்பளம்: ₹32,000 வரை ➤பிப்ரவரி 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் ➤ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News January 30, 2026
அகிம்சை அமைதியான நாள் இன்று!

ஜனவரி 30, 1948, இந்தியா அகிம்சை ஒளியை இழந்த நாள். உடம்பில் குண்டு பாய, ‘ஹேராம்’ என்ற முழக்கத்துடன், மகாத்மா காந்தி தனது இன்னுயிரை துறந்த நாள் இன்று. உலகிற்கு அகிம்சையின் சக்தியை எடுத்துரைத்த அவரின் நினைவுநாள், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. கடவுளுக்கு மதம் இல்லை என்றும் உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்கள் இருக்க வேண்டும் போன்ற அவரின் வார்த்தைகள் இன்றும் உலகை வழிநடத்தி வருகின்றன.


