News January 11, 2026
பொங்கல் பரிசால் உயிர் பறிபோனது

திருச்சி கருங்குளத்தை சேர்ந்த ஜெனிபருக்கும், அவரது கணவருக்கும் இடையே தமிழக அரசு அறிவித்த ₹3000 பொங்கல் பரிசுத் தொகையை யார் வாங்குவது என்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே சண்டை முற்றிய நிலையில், மனமுடைந்த ஜெனிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடலை கைப்பற்றி, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 26, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் சக்கரபாணி மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் கோதுமை விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுகிறது என்றும், ஜனவரி மாதத்தில் மட்டும் 30 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். உங்களுக்கு ரேஷனில் கோதுமை கிடைத்ததா?
News January 26, 2026
படுக்கையறையில் இருக்கக் கூடாத 10 பொருள்கள்

படுக்கை அறையில் நாம் வைக்கும் சில பொருள்கள் வாஸ்துப்படி தீமைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அவை: *டீ, காபி கப், சாப்பிட்ட தட்டுகள் உள்ளிட்ட கழுவப்படாத பாத்திரங்கள் *தலையணைக்கு கீழே பேப்பர், புத்தகம், தங்க நகைகள் *படுக்கையில் எலக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ், செல்லப்பிராணி. இவை தூக்கத்தை பாதிப்பதுடன், நெகடிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல படுக்கைக்கு நேராக கண்ணாடி இருக்கக் கூடாது.
News January 26, 2026
தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

<<18961392>>தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம்<<>> மறைவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த தமிழறிஞரும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் Ex துணை தலைவருமான தெ.ஞானசுந்தரம் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றதாக அவர் தெரிவித்துள்ளார். இலக்கிய ஆய்வாளர், சொற்பொழிவாளர், பேராசிரியர் என பன்முக ஆளுமை கொண்ட அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


