News January 11, 2026

காஞ்சி: டூவீலர், கார் ஓட்ட தெரிந்தவரா நீங்கள்?

image

காஞ்சிபுரத்தில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <>DigiLocker<<>>, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 18, 2026

காஞ்சி மக்களுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல் உறவு மையக் கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை ஜனவரி.19, காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெறும், என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News January 18, 2026

காஞ்சிபுரத்தில் வினோத பூஜை!

image

காஞ்சிபுரம், சாத்தணஞ்சேரி கிராம இருளர் இன மக்கள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நல்ல பாம்பைப் பிடித்து வந்து வழிபடும் வினோத மரபைக் கடைபிடிக்கின்றனர். மக்கள் பாம்பிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு, கற்பூர ஆரத்தி காட்டி வணங்குகின்றனர். பின்னர், பாம்பைக் கொண்டு வந்தவர்களுக்குக் காணிக்கை வழங்கிப் பாராட்டும் கிராமத்தினர், வழிபாட்டிற்குப் பின் அந்தப் பாம்பைப் வனப்பகுதியில் கொண்டு சென்று விடுகின்றனர்.

News January 18, 2026

காஞ்சிபுரம்: தூக்கக் கலக்கத்தால் நேர்ந்த துயரம்!

image

சித்தூரில் இருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற லாரி, திருமுடிவாக்கம் அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த டிரைவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிரைவர் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவத்தால் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!